சென்னை,
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரியவில்சன் தண்டையார்பேட்டை மண்டலம், நேதாஜி நகரில் ரூ.21.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று (26.10.2026) உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரியவில்சன், சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-38க்குட்பட்ட நேதாஜி நகர், 6ஆவது தெருவில் மூலதன நிதியில் ரூ.21.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனார்.
நியாயவிலைக் கடையில் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர். இக்கடையின் வாயிலாக 956 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.
இந்நிகழ்ச்சியில், மண்டல அலுவலர் ஏ.ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.