தமிழக செய்திகள்

மாநகராட்சி தகன மையம் நாளை முதல் 3-ந் தேதி வரை மூடல்

மாநகராட்சி தகன மையம் நாளை முதல் 3-ந் தேதி வரை மூடப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி மண்டலம்-4 வார்டு எண் 56-க்கு உட்பட்ட கருமண்டபத்தில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நவீன தகன மையத்தில் மராமத்து பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை 15 நாட்களுக்கு தகன மையம் செயல்படாது. இந்த நாட்களில் தகனம் செய்வதற்கு அருகில் உள்ள குடமுருட்டி கோணக்கரை மற்றும் ஓயாமரி தகன மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT