தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் பாளையங்கோட்டை ரோடு பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒரு நபரை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம்-I தீர்ப்பளித்துள்ளது.

கொலை வழக்கு குற்றவாளி கைது

தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையங்கோட்டை ரோடு பகுதியில் உள்ள ஒரு பூங்கா வாசல் முன்பு கடந்த 2020-ம் ஆண்டு, தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பன் மகன் நமச்சிவாயராஜ் (வயது 55) என்பவர் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி மணிநகரைச் சேர்ந்த முத்துராஜ் மகன் ஆல்பர்ட் சந்திரபோஸ்(51) என்பவரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றம்-I-ல் (ADJ-I) நடைபெற்று வந்த நிலையில், மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம் நேற்று (5.10.2026) ஆல்பர்ட் சந்திரபோஸ் என்பவரை குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

SCROLL FOR NEXT