கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அதிகார ஆணவத்தில் மிதக்கும் தவெக அரசுக்கு முருகப்பெருமான் தக்க பாடத்தை புகட்டுவார் - நயினார் நாகேந்திரன்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதித்து, தெரிந்தே மாபெரும் வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டார் முதல்வர் விஜய் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிகார ஆணவத்தில் மிதக்கும் தவெக அரசுக்கு முருகப்பெருமான் தக்க பாடத்தை புகட்டுவார் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சிறுபான்மையினரின் செல்லப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், இடைத்தேர்தலில் இஸ்லாமிய சமூகத்தினரின் மொத்த வாக்குகளையும் வாரிச்சுருட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகள் தப்பித்தவறிக் கூட மீட்கப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதித்து, தெரிந்தே மாபெரும் வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டார் முதல்வர் விஜய்! ஜோசப் விஜய் எனும் கத்துக்குட்டியின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ‘பலிகடாவாக’ தனது தலையை தெரிந்தே கொடுத்திருக்கிறார் மதுரை மாவட்ட ஆட்சியர்!

‘திருப்பரங்குன்ற தீபத்தூணில் இன்று ஒருநாள் மட்டும் கார்த்திகை தீபம் ஏற்றுங்கள்’ என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும், ‘நீதித்துறையுடன் விளையாடாதீர்கள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை உடனடியாக செயல்படுத்துங்கள்’ என ஐகோர்ட்டு எச்சரித்தும் கூட, நீதித்துறையின் மாண்பை மதிக்காத ஜோசப் விஜய்யையும், அவரது இந்துவிரோத அரசையும் சட்டம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை!

ஜோசப் விஜய், எந்த ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து இந்துக்களை புண்படுத்தினாரோ, எந்த அரியணையை தக்க வைத்துக் கொள்வதற்காக பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக திரும்பினாரோ, எந்த பதவியை பாதுகாத்துக் கொள்ள நீதிமன்றங்களை பகைத்துக் கொண்டாரோ, அந்த பதவியும், ஆட்சியும், அரசும் இனி நெடுநாள் நீடிக்கப் போவதில்லை என்பது தற்போது தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது!

இதே தவறைத் தான் அப்போது ஆட்சியில் இருந்த திமுகவும் செய்தது, தனது ஆட்சியை இழந்தது! தற்போதைய தவெக அரசும் அதே தவறைத் தான் செய்துள்ளது, இதற்கான விளைவுகளையும் கூடிய விரைவில் சந்திக்கப் போகிறது! அதிகார ஆணவத்தில் மிதக்கும் தவெக அரசுக்கு முருகப்பெருமான் தக்க பாடத்தை புகட்டுவார்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT