தமிழக செய்திகள்

குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சப்பர வீதி உலா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடந்த சப்பர வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடிமாத கடைசி செவ்வாய்க்கிழமை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 2 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றது. பின்னர் முத்தாரம்மன் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT