தமிழக செய்திகள்

“எல்லா இலக்கணத்திலும் பொருந்தி வாழும் என் சகோதரர்” - சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

சீமான் இன்று (நவம்பர் 8) தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சென்னை,

கமல்ஹாசன், சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீமான் பிறந்தநாள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும், நடிகருமான செந்தமிழன் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி நாம் தமிழர் கட்சியினர், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கவிதை நடையில் வாழ்த்திய கமல்ஹாசன்

இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சினிமாவில் தனது முயற்சியால் கற்றுத் தகுதி பெறும் பெரும் உழைப்பையும், மேடைகளில் சிறப்பாகப் பேசும் ஆற்றலையும், அரசியலில் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் தன்மையையும் குறிப்பிட்டு சீமானைப் பாராட்டியுள்ளார்.

மேலும், "இப்படி இக்கணத்தில் எல்லா இலக்கணத்திலும் பொருந்தி வாழும் என் சகோதரர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று பிறந்தநாள். செந்தமிழனுக்கு என் சிந்தை மகிழ் வாழ்த்துகள்" என்று கவிதை வடிவில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்தப் பிறந்தநாள் வாழ்த்து பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT