தமிழக செய்திகள்

அனைத்து தொழிலாளர் பெருமக்களுக்கும் எனது ‘மே தின’ நல்வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்

தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் வெற்றி பெற ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தொழிலாளர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்கும் நாளாகவும், தொழிலாளர்களின் வெற்றிகளை நினைவுகூரும் நாளாகவும் ‘மே தின’ திருநாள் விளங்குகிறது.

நம் நாடு சிறந்த கட்டமைப்பினை இன்றைக்கு பெற்றிருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணமாக விளங்குபவர்கள் தொழிலாளர்கள். உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் ‘மே தின’ நன்னாளில் அனைத்து தொழிலாளர் பெருமக்களுக்கும் எனது ‘மே தின’ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் வெற்றி பெற எனது நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.