சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.
இந்த நிலையில், த.வெ.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் இன்று புதிதாய் பிறந்ததைப் போல் உணர்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தில் நான் இணைந்ததற்கான எனது நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என நான் எடுத்த சபதம் நிறைவேறி இருக்கிறது.
த.வெ.க.வின் தொண்டனாக, தலைவர் விஜய்யின் கண்ணசைவில் நான் கடமையாற்றி இருக்கிறேன். என்னுடைய கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.