தமிழக செய்திகள்

திருச்சியில் த.வெ.க. அலுவலகத்திற்கு தீவைத்த மர்ம நபர்கள் - போலீஸ் தீவிர விசாரணை

அடையாளம் தெரியாத 2 நபர்கள் த.வெ.க. அலுவலகத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலையில் அமைந்துள்ள த.வெ.க. தேர்தல் பணிமனை அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் அலுவலகத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

காலையில் அலுவலகம் தீப்பற்றி எரிந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கட்சி நிர்வாகிகள், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT