சூனாம்பேடு,
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த கடப்பாக்கம் கடற்கரை பகுதியில் நேற்று காலை 25 அடி நீளம் உடைய ஏவுகணை வடிவிலான மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதை பார்த்த மீனவர்கள் போலீசார் மற்றும் வரு வாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக் டர் ஜவகர்குமார், செய்யூர் தாசில்தார் ராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
தீயணைப்பு மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். அந்த பொருள் ஏவுகணை வடிவில் இருந்ததால் கல்பாக்கத்தை அடுத்த அணுபுரத்தில் உள்ள கடற்படை தளத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சம் பவ இடத்திற்கு வந்த 3 இந்திய கடற்படை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் அது 25 அடி நீளம், 2.5 அடி விட்டம், 1.5 டன் எடை உடைய, கட லுக்கு அடியில் பயிற்சி மற்றும் சோதனைக்காக பயன்படுத்தப்படும் டார்பிடோ வகை மாதிரி ஏவுகணை என்பது தெரியவந்தது. நேற்று காலை கரை ஒதுங்கிய மாதிரி ஏவுகணையின் ப்ரொப்பெல்லர்களில் மீன் வலைகள் சிக்கி ஏவுகணை செயல்இழந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.அந்த மாதிரி ஏவுகணை டிராக்டர் மூலமாக கரைக்கு இழுத்து வரப்பட்டது.பின்னர் கிரேன் மூலமாக கடற்படைக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றப்பட்டு, அணுபுரத்தில் உள்ள கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கடப்பாக் கம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருளால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.