தமிழக செய்திகள்

நாகர்கோவில்: மதுபோதையில் ஓட்டிய 18 ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ.1.8 லட்சம் அபராதம்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அன்ஷூல் நாகர் உத்தரவின் பேரில் நாகர்கோவிலில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மதுபோதையில் ஓட்டிய 18 ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மதுபோதையில் ஆட்டோ ஓட்டிய ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அன்ஷூல் நாகர் உத்தரவின் பேரில், நாகர்கோவில் உட்கோட்ட டி.எஸ்.பி. இளஞ்செழியன் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நாகர்கோவிலில் வாகன சோதனை நடத்தினர். அப்போது மதுபோதையில் ஆட்டோ ஓட்டிய 18 ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

18 ஆட்டோக்கள் பறிமுதல், ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம்

அதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் 18 ஆட்டோக்களை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்து ரத்து செய்ய பரிந்துரை செய்தனர். மேலும் மதுபோதையில் ஆட்டோ ஓட்டிய ஓட்டுநர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT