தமிழக செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா; மேரி பிரின்சி லதா பொறுப்பு மேயராக நியமனம்

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், வரும் சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கன்னியாகுமரி,

2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக மகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தேர்தல் விதிகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அதன்படி அவர் தனது ராஜினாமா கடிதத்தை நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனரிடம் வழங்கினார்.

மேயர் பதவி காலியானதைத் தொடர்ந்து, மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி துணை மேயராக பணியாற்றி வந்த மேரி பிரின்சி லதா, நேற்று முதல் நாகர்கோவில் மாநகராட்சியின் பொறுப்பு மேயராக பணிகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் அவர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.