தமிழக செய்திகள்

நெல் விலையை உயர்த்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

பருத்திக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.557 உயர்த்தப்பட்டிருப்பதும் மிகுந்த வரவேற்பிற்குரியது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

2026-27 ஆம் ஆண்டின் நெல் உள்ளிட்ட 14 வகை கரீப் பருவப் பயிர்கள் மற்றும் தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து நமது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அதிலும், பல கோடி விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தப்பட்டிருப்பதும், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.557 உயர்த்தப்பட்டிருப்பதும் மிகுந்த வரவேற்பிற்குரியது.

விளைச்சலை அதிகப்படுத்துவதற்கு விவசாயிகள் கௌரவ நிதி, பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மண் வள அட்டை திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதோடு, விளையும் பயிருக்கு உரிய விலையையும் உத்தரவாதம் அளித்து விவசாயிகளின் நல்வாழ்வுக்கு என்றும் வித்திடும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக விவசாயிகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.