சென்னை,
பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாளையொட்டி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.