சென்னையில் ஏடிஜிபியாக பணியாற்றி வரும் நஜ்முல் ஹோடா தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நஜ்முல் ஹோடா தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் வகித்து வந்த ஏடிஜிபி ( ஆபரேஷன்) கூடுதல் பொறுப்பாக ஆயுதப்படைபிரிவின் ஏடிஜிபியாக இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியான டாக்டர் ஆர் தினகரனிடம் வழங்கப்பட்டுள்ளது
தாம்பரம் காவல் ஆணையர் பணியிடம் கடந்த ஒரு மாதமாக காலியாக இருந்தது. தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக மாற்றப்பட்டார். அதன்பிறகு புதிதாக தாம்பரத்துக்கு காவல் ஆணையர் நியமனம் செய்யப்படவில்லை. தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பை சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் தற்போது நஜ்முல் ஹோடா அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.