தமிழக செய்திகள்

நளினிக்கு 10 வது முறையாக பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பரோல் வழங்கப்பட்டது.

தன்னுடைய தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று கையெழுத்திட்டு வருகிறார். அவர் தங்கி உள்ள வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நளினியின் பரோல் கடந்த மாதம் 9-வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில் நளினிக்கு 10வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

SCROLL FOR NEXT