நாமக்கல்,
பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் வரத்து குறைவால் குண்டு மல்லி கிலோ ரூ.1,600-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பூக்கள் சாகுபடி அதிகளவு செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தை களுக்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.200-க்கும், கலர் ரோஸ் ரூ.200-க்கும், பச்சை முல்லை ரூ.600-க்கும், வெள்ளை முல்லை ரூ.500-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், கனகாம்ப ரம் ரூ.700-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.150-க்கும், ஜாதி மல்லி ரூ.500-க்கும், காக்காட்டான் ரூ.400-க்கும் விற்பனையானது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி வரத்து குறைந்ததால் கிலோ ரூ.1,600-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.150-க்கும், கலர் ரோஸ் ரூ.300-க்கும், பச்சை முல்லை ரூ.1,000-க்கும், வெள்ளை முல்லை ரூ.800-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும், பன்னீர்ரோஸ் ரூ.120-க்கும், ஜாதி மல்லி ரூ.800-க்கும், காக்காட்டான் ரூ.600-க்கும் ஏலம் போனது.