தமிழக செய்திகள்

நாமக்கல்: கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

இந்த சம்பவத்தில் இளைஞர் படுகாயமடைந்தார்

நாமக்கல்,

வைகாசி விசாகத்தையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இளைஞர் உயிரிழப்பு

இந்நிலையில், தேரோட்டத்தின்போது ரதவீதியில் தேர் திரும்புகையில் தேரின் சக்கரத்திற்குள் 2 இளைஞர்கள் சிக்கிக்கொண்டனர். தேர் திரும்புகையில் தேரின் சக்கரத்திற்குள் அப்பகுதியில் இருந்த சுவருக்கும் இடையே ஹர்ஷ்வர்தன் என்ற இளைஞரும், சஷ்டிகன் என்ற இளைஞரும் சிக்கிக்கொண்டனர்.

இதில், தேரின் சக்கரத்திற்குள், சுவருக்கும் இடையே சிக்கிய இளைஞர் ஹர்ஷ்வர்தன் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் சஷ்டிகன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT