சென்னை,
தேசிய புத்தக நேசிப்பாளர்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9 அன்று உலகம் முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் வாசிப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடவும், புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
புத்தகங்கள் வெறும் பக்கங்கள் அல்ல; அவை அறிவை வளர்க்கும் வழிகாட்டிகள், சிந்தனையை விரிவுபடுத்தும் நண்பர்கள், தலைமுறைகளை இணைக்கும் அறிவுப் பாலங்கள்.
வாசிப்பை நேசிப்போம்... புத்தகங்களைப் போற்றுவோம்... அறிவார்ந்த தலைமுறையை உருவாக்குவோம்! அனைத்து புத்தக நேசிப்பாளர்களுக்கும் தேசிய புத்தக நேசிப்பாளர்கள் தின நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.