தமிழக செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் - பியூஸ் கோயல்

தேசிய ஜனநாயகக் கூட்​டணி உறு​தி​யான வெற்​றியை நோக்​கிச் சென்​று​கொண்​டிருக்​கிறது என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.

மதுரை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (திங்கட்கி ழமை) நடக்கிறது. இந்தநிலையில் மதுரை வலையங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மத்திய மந்திரி பியூஸ் கோயல், பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்கு எண்ணும் மையங்களில் பணி யில் உள்ள முகவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் தென் மாவட்டத்தில் உள்ள 17 தொகுதிகளை சேர்ந்த பா.ஜனதா வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை தலைமை முகவர்கள், அனைத்து வாக்கு எண் ணிக்கை முகவர்கள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணும் முக வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பியூஸ் கோயல் கூறியதாவது:-

தேசிய ஜனநாயகக் கூட்​டணி உறு​தி​யான வெற்​றியை நோக்​கிச் சென்​று​கொண்​டிருக்​கிறது. தமிழகத்​தின் வளர்ச்​சிக்​காக உழைக்​கக்​கூடிய, தமிழ் மக்​களின் பெருமை மற்​றும் கலாச்​சா​ரத்​தைப் பாது​காக்​கக்​கூடிய, பெண்​களின் நலன் மற்​றும் கண்​ணி​யத்தை உறுதி செய்​யக்​கூடிய ஒரு அரசாங்​கம் அமை​யும். இந்த வெற்​றி​யில் எனக்​குப் பெரிய நம்​பிக்கை உள்​ளது.

தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக் கணிப்​பாளர்​கள், அவர்​கள் தங்​களது வேலை​யைச் செய்​கின்​றனர். நாங்​கள் எங்​கள் வேலை​யைச் செய்​கிறோம். ஒட்​டுமொத்த தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக் குடும்​ப​மும் மிகச்​சிறந்த பிரச்​சா​ரத்தை மேற்​கொண்​டது. நாம் ஒரு வசதி​யான பெரும்​பான்​மை​யைப் பெற்று ஆட்சி அமைப்​போம். இதில் ஏதேனும் சந்​தேகம் இருந்​திருந்​தால், நான் டெல்​லியி​லிருந்து இவ்வளவு தொலைவு வந்​திருக்க மாட்​டேன். இவ்வாறு அவர் கூறினார்.