தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கி 122 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், முடநீக்கு வல்லுனர் இனியன், சிறப்பு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT