தமிழக செய்திகள்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்து

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் முதல்-அமைச்சரை சந்தித்தனர்.

சென்னை,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு தொடர்பாக ரூ.317 கோடி நிலுவைத் தொகையாக இருப்பதாகவும், அதனை மத்திய அரசிடம் பேசி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி முதல்-அமைச்சரிடம் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் நிலுவைத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத் தர தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.