தமிழக செய்திகள்

தமிழக மக்களின் பாதுகாப்பை சூறையாடும் தவெகவினர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினர் தற்போது கற்பழிப்பு போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் பாதுகாப்பை சூறையாடி வருகின்றனர்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.

மக்கள் பாதுகாப்பு

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, லஞ்சம் கேட்பது, மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினர் தற்போது கற்பழிப்பு, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் பாதுகாப்பை சூறையாடி வருகின்றனர்.

இந்த லட்சணத்தில், முதல்-அமைச்சர் பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுத்து, முதலில் தான் வகிக்கும் பதவியின் பொறுப்பினை உணர்ந்து, தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.