கோவை,
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான இன்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சியினர் இணைந்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் கடந்த முறை போலவே அனைத்து தொகுதிகளிலும் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெறும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த இரு தினங்களாக திமுகவின் கரூர் ரவுடி கும்பல் இங்கு வந்து காவல்துறை அதிகாரிகளை மிரட்டி, காவல் நிலையத்திலேயே ரகளை செய்து வருகின்றனர். கோவை மக்கள் மிகவும் அமைதியானவர்கள் தான், வாக்காளர்கள் அனைவரும் இங்கு நடக்கும் அனைத்தையும் பார்த்துவிட்டு தெளிவாக வாக்களிப்பார்கள். திமுகவினர் வாக்காளர்கள் அனைவருக்கும் ஓட்டுக்கு காசு கொடுத்து வருகின்றனர்.
டாஸ்மாக்கில் ஆயிரக்கணக்கான கோடி அளவில் கொள்ளையடித்துவிட்டு இப்போது கோவையின் வளங்களை கொள்ளையடிக்க செந்தில்பாலாஜி இங்கு வந்திருக்கிறார். எல்லா இடங்களிலும் போதைப்பொருளை விற்றுவிட்டு அதன் மூலம் திமுகவினர் ஆதாயம் அடைந்து விட்டு இப்போது ஓட்டுக்கு காசு கொடுத்து வருகின்றனர். மக்கள் தெளிவாக சிந்தித்து வாக்களிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ள்ளார்.