தமிழக செய்திகள்

தட்டார்மடம் அருகே பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் மீது தாக்குதல்

தட்டார்மடம் அருகே பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை மோடி நகரை சேர்ந்த சின்னத்துரை மனைவி கவிதா (வயது 35). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும், அவர் அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், எம்மா கிழவிவிளையை சேர்ந்த ராஜன் மகன் செல்வ பிரின்ஸ்(30) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கவிதாவுக்கும், செல்வபிரின்சுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கவிதாவை சல்வபிரின்ஸ் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் செல்வபிரின்ஸை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதை தொடர்ந்து செல்வபிரின்ஸிடம் கவிதா பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கவிதா மோடிநகர் விலக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வபிரின்ஸ் அவரிடம் தகராறு செய்து சரமாரியாக அடித்து உதைத்தாராம். கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த செல்வபிரின்ஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம். இதில் காயமடைந்த கவிதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன்பிள்ளை வழக்குப்பதிவு செய்து செல்வ பிரின்ஸை கைது செய்தார்.

SCROLL FOR NEXT