சென்னை,
சென்னையில் ஜூன் 21 ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் அன்று வார அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் (யுஜி) நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் நீட் மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்படும் என்றும் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்தது.
நீட் வினாத்தாள் கசிவு விவாகரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. சமூக வலைதளம் மூலம் பிரபலமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னையில் ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடைபெறும் அன்று வார அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது
ஞாயிற்றுக்கிழமை ஆயினும் வார இறுதி அட்டவணையில் வாராந்திர அட்டவணையில் ரெயில்கள் இயங்கும் எனவும் மாணவர்களுக்கு உதவ முக்கிய ரெயில்கள் நிலையங்களில் சிறப்பு நீட் உதவி மையங்களும் அமைக்கபட உள்ளன. சென்ட்ரல், சென்னை எழும்பூர்,, தாம்பரம், பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளூர், காட்ப்பாடி ஆகிய நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.