தமிழக செய்திகள்

நெல்லை: கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் 3 வாலிபர்கள் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.

நெல்லை,

கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு திருநெல்வேலி மாநகர பகுதியில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கு

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர், மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த கோபால் மகன் பொன்ராஜ் (வயது 26), வெள்ளப்பாண்டி மகன் மணிகண்டன்(23), பாலையா மகன் மகாராஜன்(28) ஆகிய 3 பேர் நெல்லை மாநகர பகுதியில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.

3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

அதன் காரணமாக மேற்சொன்ன 3 பேரும் தச்சநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின்பேரில், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி இன்று (29.9.2026) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT