சென்னை,
திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லையில் போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வருபவர் கே.சுரேஷ்குமார். இவர் ஏற்கனவே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டாகவும், அவிநாசி நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் பதவி உயர்வில் மாவட்ட நீதிபதியாக பல்வேறு ஊர்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
கோவையில் பணியாற்றியபோது பணியில் ஒழுங்கீனமாகவும், நடத்தை குறைவாகவும் நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தீப்தி அறிவுநிதி உத்தரவிட்டுள்ளார்.