சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* நெல்லையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06030), வருகிற 5-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரையில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06029) வருகிற 6-ந்தேதி முதல் ஜூன் 8-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்டிரலில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் சிறப்பு ரெயில் (01927), இன்று (புதன்கிழமை) முதல் வருகிற மே 27-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு கான்பூர் சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில் (01928), வருகிற 3-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.