தமிழக செய்திகள்

நெல்லை: வீட்டில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்த சமோசா வியாபாரி கைது

நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு சமோசா வியாபாரி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையத்தில் வீட்டில் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த சமோசா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

சமோசா வியாபாரி வீட்டில் கஞ்சா பதுக்கல்

நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது யூனுஸ் (வயது 25). சமோசா வியாபாரியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அவரின் வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.

4 கிலோ கஞ்சா பறிமுதல்; கைது

அப்போது வீட்டில் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்ததோடு, கஞ்சாவையும் பறிமுதல் செய்து மேலப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முகமது யூனுசின் உறவினர் ஒருவர் கஞ்சா வியாபாரி என்பதும், அவர் சம்பவத்தன்று 4 கிலோ கஞ்சாவை வீட்டில் வைத்துக்கொள், 2 நாட்களில் வாங்கி கொள்கிறேன் என்று கூறி சென்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவரையும் சேர்த்து போலீசார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT