தமிழக செய்திகள்

நெல்லையில் நாளை மாஞ்சோலை தொழிலாளர் நினைவு பேரணி: காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் பங்கேற்பு

மாவட்ட தலைவர்கள் ராமேஸ்வரன் மற்றும் வி.பி. துரை ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பங்கேற்கிறார்கள்.

சென்னை,

நெல்லையில் நாளை மாஞ்சோலை தொழிலாளர் நினைவு பேரணி: காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் பங்கேற்பு. இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

நினைவு பேரணி

திருநெல்வேலியில் நாளை மாலை 3.00 மணியளவில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க நடைபெறவுள்ள நினைவு பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ், மாவட்ட தலைவர்கள் ராமேஸ்வரன் மற்றும் வி.பி. துரை ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பங்கேற்கிறார்கள்.

பங்கேற்பார்கள்

இந்நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள்- முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாநகர, நகர, வட்டார, பேரூர் மற்றும் கிராம கமிட்டி நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.