தமிழக செய்திகள்

நெல்லை: மனைவியை கொன்றுவிட்டு 4 வயது குழந்தையுடன் தப்பிய தொழிலாளி கைது

அருணாச்சலத்தை கைது செய்தத போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

நெல்லை,

நெல்லையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு 4 வயது குழந்தையுடன் தப்பிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தம்பதி

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனோபி(வயது 34). இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

மர்மமான முறையில் உயிரிழப்பு

இந்நிலையில், கடந்த 7-ந்தேதி வனோபி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்தன. மேலும் வனோபியின் கணவர் அருணாச்சலம் மற்றும் குழந்தை ஆகிய இருவரும் மாயமாகியிருந்தனர். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின்போது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கணவர் அருணாச்சலமே அவரது மனைவியை கொலை செய்துவிட்டு, குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து அருணாச்சலத்தை போலீசார் கைது செய்ததுடன், குழந்தையையும் பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT