தமிழக செய்திகள்

28-ந்தேதி நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: பாதுகாப்பு பணிகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ளது.

திருநெல்வேலி,

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28.6.2026, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ஆய்வு:

இந்த நிலையில் நெல்லை டவுணில் உள்ள நெல்லையப்பர் கோவில் தேரோட்ட திருவிழாவின்போது 4 ரத வீதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) விஜயகுமார், உதவி கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.