தமிழக செய்திகள்

சென்னை தொலைபேசி பிரிவின் பி.எஸ்.என்.எல். புதிய தலைமை பொதுமேலாளர் பொறுப்பேற்பு

பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் முதன்மை பொதுமேலாளராக பணிபுரிந்தார்.

சென்னை,

பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி பிரிவின் புதிய தலைமை பொது மேலாளராக பி.சுதாகர ராவ் நேற்று

பொறுப்பேற்றார். இவர் 1992-ம் ஆண்டு இந்திய தொலைத்தொடர்பு சேவை அதிகாரி ஆவார். பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் முதன்மை பொதுமேலாளராக பணிபுரிந்தார். தொலைதொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகளில் அனுபவம் கொண்டவர்.

'மொபைல் கோர் நெட்வொர்க்'

குறிப்பாக புதிய தொழில்நுட்ப சுவிட்சுகள், தொலைதொடர்பு நெட்வொர்க் நிர்வாகம் மற்றும் திட்டமிடல், 'மொபைல் கோர் நெட்வொர்க்' இயக்கம் மற்றும் பராமரிப்பு, செல்போன் இணைப்பு திட்டமிடல் மற்றும் பி.எஸ்.என்.எல். விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் அனுபவம் பெற்றவர். இவர் ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேச வட்டம், வடகிழக்கில் உள்ள ஷில்லாங், தெலுங்கானா வட்டம் மற்றும் தமிழ்நாடு வட்டம் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.