சென்னை,
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரித்து, புதிய நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’ அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் தலைமையில் மொத்தம் 19 அரசு அதிகாரிகள் இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். அதாவது நிலம், உள்கட்டமைப்பு, மின்சாரம், நீர், சுற்றுச்சூழல், வரி மற்றும் தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
தொழில் முதலீடுகள் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, முதலீட்டாளர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும். 2036-க்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை அடைய இந்த ஆணையம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.