சென்னை,
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட குழுவை கலைத்துவிட்டு, புதிய குழுவினை தவெக அரசு அமைத்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த குழுவில் 17 உறுப்பினர்களை அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த குழு 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை நிர்ணயம் செய்யவுள்ளது
முந்தைய திமுக ஆட்சியில் இரண்டு குழு அமைக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அதனை மாற்றியமைத்து புதிய குழுவினை அமைத்துள்ளது. திமுக ஆட்சியில் 1முதல் 3-ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. தற்போது 4முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான புதியபாடத்திட்டத்தை கொண்டு வருவதற்காக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குழுவினை கலைத்துவிட்டு இந்த புதிய குழுவினை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் மயில்சாமி அண்ணாதுரையுடன், விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ரீட்டா ஜான் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ளார்.