சென்னை,
சென்னையில் இருந்து திருச்சிக்கு வெறும் 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 300 கிலோமீட்டர் நீளமுடைய புதிய விரைவுச்சாலை (எக்ஸ்பி ரஸ்வே) திட்டப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கி உள்ளது. ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், தமிழ்நாட்டின் 2-வது தேசிய விரைவுச்சாலையாக அமையும்.
இதற்கு முன்பு சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய சாலையில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் பயணிக்க முடியும். தற்போது சென்னை-திருச்சி இடையே பயணம் செய்ய 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகும் நிலையில், புதிய விரைவுச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும்.
இந்த விரைவுச்சாலை 12 மாவட்டங்கள் வழியாக செல்லும். இது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் வசதிகளு டன் அமைக்கப்படும்.