கோவை,
கோவையில் இருந்து பெங்களூருவுக்கு அடுத்த மாதம் 25-ந் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்குகிறது.
கோவையில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கி ருந்து சென்னை. பெங்களூரு, புதுடெல்லி, மும்பை உள்பட உள்நாட்டு நகரங்களுக்கும், சார்ஜா, அபுதாபி, துபாய் உள்பட வெளிநாட்டு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கடந்த 1-ந் தேதி முதல் கோவை-மும்பை இடையே தினந்தோறும் 2 புதிய விமான சேவையை தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவை-பெங்களூரு இடையே தினமும் 2 முறை விமானங்களை இயக்க உள்ளது. அதன்படி கோவையில் காலை 9.10 மணிக்கு புறப்படும் விமானம் பெங்களூரு விமான நிலையத்தை காலை 10.05 மணிக்கு சென்றடையும். இதுபோன்று இரவு 9.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் மற்றொரு விமானம் இரவு 10.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.25 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வந்து சேரும். இதுபோன்று இரவு 7.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப் படும் மற்றொரு விமானம் இரவு 8.15 மணிக்கு கோவையை வந்தடையும். இந்த புதிய விமான சேவை முதற்கட்டமாக அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந் தேதி முதல் தொடங்கும் என்றும், அதன்பின்னர் நவம்பர் 1-ந் தேதி முதல் முழுமையான விமான சேவையாக இயக்கப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
இதன் மூலம் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இயக் கும் கோவை-பெங்களூரு இடையேயான விமான சேவைகளின் எண்ணிக்கை தினமும் 5 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.