வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் சேமியா நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி போதும்பொன்னு (வயது 24). இவர் தனது வீட்டில் கவரிங் வளையல் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது. இந்த நிலையில் கார்த்திகேயன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாதபோது போதும்பொன்னு வீட்டு மாடியில் உள்ள ஆஸ்பெட்டாஸ் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போதும்பொன்னுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போதும்பொன்னு எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழனி ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.