தமிழக அரசு 
தமிழக செய்திகள்

ரூ.2.50 கோடியில் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தின் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் - தமிழக அரசு தகவல்

அருப்புக்கோட்டை விசைத்தறிக்கூட வளாகத்தில் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்காக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 20 நவீன தையல் இயந்திரங்களுடன் கூடிய புதிய தையல் அலகு துவக்கப்படும்.

சென்னை,

ரூ.2.50 கோடியில் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தின் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

20 நவீன தையல் இயந்திரங்கள்

தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்திற்கு சொந்தமான அருப்புக்கோட்டை விசைத்தறிக்கூட வளாகத்தில் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்காக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 20 நவீன தையல் இயந்திரங்களுடன் கூடிய புதிய தையல் அலகு துவங்குதல் மற்றும் கோயம்புத்தூர் குறிச்சியில் இந்நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள காலியிடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டடம் மற்றும் கிட்டங்கி கட்டுவதற்கு தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்தின் சொந்த நிதியிலிருந்து செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜியால் சட்டமன்றத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் தொழில் துறைகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மானிய கோரிக்கை

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி, 2026-27ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கையில்"தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்திற்கு சொந்தமான அருப்புக்கோட்டை விசைத்தறிக்கூட வளாகத்தில் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்காக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 20 நவீன தையல் இயந்திரங்களுடன் கூடிய புதிய தையல் அலகு துவக்கப்படும்.

அலுவலக கட்டடம்

மேலும், கோயம்புத்தூர் குறிச்சியில் இந்நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள காலியிடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டடம் மற்றும் கிட்டங்கி கட்டப்படும்” என்ற அறிவிப்பினை தமிழ்நாடு பஞ்சாலைக் கழக சொந்த நிதியிலிருந்து செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுவதுடன் நிறுவனத்தின் செயல்பாடுகள் அதிகரிக்கப்பட்டு, வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களும் பயனடைவர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT