தமிழக அரசு 
தமிழக செய்திகள்

ஈரோட்டில் ஜவுளி தொழிலின் மேம்பாட்டிற்கு; புதிய மண்டல துணை இயக்குநர் அலுவலகம் - தமிழக அரசு

மானிய கோரிக்கையில் ஜவுளி தொழிலின் மேம்பாட்டிற்காக ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டல துணை இயக்குநர் அலுவலகம் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சென்னை,

ஜவுளி தொழில் செறிவு மிகுந்த ஈரோடு பகுதியில் ஜவுளித் தொழிலின் மேம்பாட்டிற்காக ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டல துணை இயக்குநர் (துணிநூல்) அலுவலகம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

முக்கிய அறிவிப்புகள்

கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜியால் சட்டமன்றத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் தொழில் துறைகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மானிய கோரிக்கை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜியால், 2026-2027-ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கையில் "ஜவுளி தொழில் செறிவு மிகுந்த ஈரோடு பகுதியில் ஜவுளி தொழிலின் மேம்பாட்டிற்காக ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டல துணை இயக்குநர் (துணிநூல்) அலுவலகம் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பிற்கிணங்க, ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டல துணை இயக்குநர் (துணிநூல்) அலுவலகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஜவுளி மதிப்புத் தொடரின் அனைத்து தொழில் முனைவோர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் /ஏற்றுமதியாளர்கள் அரசு திட்டங்களின் கீழ் பயன்களை எளிதாகவும், விரைவாகவும் பெற்று பயனடைவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT