தமிழக செய்திகள்

புது தமிழ்நாடு மாடல் 'வாஷிங்மெஷின்' குட்கா கறைகளைக் கூட நீக்குமாமே... உண்மையா? - கனிமொழி பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று த.வெ.க.வில் இணைகின்றனர்.

சென்னை,

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இன்று இணைகிறார்கள். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங்மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங்மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.