தமிழக செய்திகள்

தாம்பரத்தில் குப்பைகளை லாரிகளில் கொண்டு செல்ல புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

தமிழகத்திலேயே முதல் முறையாக தாம்பரத்தில் கம்ப்ரஸர் எந்திரம் மூலம் குப்பைகள் அழுத்தப்பட்டு, முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கம்ப்ரஸர் எந்திரம் மூலம் குப்பைகள் அழுத்தப்பட்டு, முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அந்த லாரிகளில் குப்பைகளை ஏற்றிச் செல்லும்போது துர்நாற்றம் வீசாமலும் சாலையில் கொட்டாமலும் இருக்கும் வகையில் அட்வான்ஸ் டெக்னாலஜி முறையில் அந்த குப்பைகள் கொண்டு செல்லப்படும் என தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.