தமிழக செய்திகள்

வணிகவரித்துறையில் புதிய வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று (19.05.2025) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர் வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்ட 23 வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டிற்க்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்

கூட்டத்தில் பேசிய அமைச்சர்,

கடந்த நிதி ஆண்டில் வரி வருவாய் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக செயல்பட்ட ஆணையர் மற்றும் அனைத்து உயர் அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து, நடப்பு நிதி ஆண்டிலும் அதே முனைப்புடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு அரசு நிர்ணயித்துள்ள வருவாய் இலக்கினை அடைவதற்கு அனைத்து இணை ஆணையர்களும் சிறந்த முறையில் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) மொ.நா.பூங்கொடி, மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT