தமிழக செய்திகள்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் புக் செய்ய புதிய வழி… வாட்ஸ்அப் மூலம் சேவை

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் விரைவாகப் பெற, 94450 30725 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

94450 30725 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என மெசேஜ் அனுப்பி, தங்களின் தற்போதைய இடத்தை (Location) பகிர்வதன் மூலம் ஆம்புலன்ஸை எளிதாக புக் செய்ய முடியும்.

மேலும், ஆம்புலன்ஸ் எண், ஓட்டுநர் தொடர்பு, வரும் வழித்தடம் மற்றும் வருகை நேரம் போன்ற தகவல்களையும் கைப்பேசியில் உடனடியாக அறிந்து கொள்ளலாம். இந்த புதிய வசதி, அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வரும் நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.