தமிழக செய்திகள்

சென்னையில் இன்று முதல் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து

தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் மின் சார ரெயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் பணிகள் நடைபெற உள்ளது.

எனவே சென்னை கடற்கரையில் இருந்து இன்று முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 10.20 மணி முதல் 11.59 வரை இயக்கப்படும் மின்சார ரெயில்களும், அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து இயக்கப் படும் ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. எனவே, பயணிகள் தங்களுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு பயணம் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.