தமிழக செய்திகள்

நீலகிரி: வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை - வனத்துறையினர் விசாரணை

சிறுத்தை இறப்புக்கான காரணம் தெரியவில்லை.

நீலகிரி,

சிங்காரா வனப்பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து கிடந்த சிறுத்தை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள் என பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதேபோல் விலை உயர்ந்த மரங்களும் உள்ள தால், வனத்துறையினர் தினமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியான சிங்காரா வனச்சரகத்தில் நார்தன்ஹே காப்பு காட்டிற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது கிரிட் ஓடை பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இதனால் உயர் அதிகாரிகளுக்கு வன ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா சங்கர் உத்தரவின் பேரில், மசினகுடி கோட்ட துணை இயக்குனர் வித்யாதர் தலைமையில் சிங்காரா வனச்சரகர் விமல்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

வயது மூப்பு

பின்னர் சிறுத்தை இறப்பு குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின் படி 10 வயதான பெண் சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இறப்பிற்கான காரணம் அறியும் பொருட்டு, உடல் பாகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதன் அறிக்கைக்கு பின்னரே உண்மை காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது. வயது மூப்பு காரணமாக பெண் சிறுத்தை உயிரிழந்திருக்கலாம். இருப்பினும், அதன் பின்னங்கால்கள் செயல் இழந்தது போல், போதிய வளர்ச்சி இல்லாமல் காணப்படுகிறது.

இருப்பினும் பரிசோதனை அறிக்கையில் காரணம் தெரியவரும் என்றனர்.

SCROLL FOR NEXT