நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை உலா வரும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை கிராமத்தில் சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் அடிக்கடி உலா வருவது வழக்கமாகியுள்ளது. இந்த நிலையில், அங்குள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, வீட்டின் முன்புறம் சாலையில் நீண்ட தூரம் உலா வரும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே, குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.