கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நீலகிரி: தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா - தொழிலாளர்கள் பீதி

சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச், செம்மன் வயல், கல்லட்டி, இந்திரா நகர், இண்கோநகர், இரும்பு பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகள், வளர்ப்பு நாய்களை வேட் டையாடி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சைனி என்பவரது வீட்டின் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா வந்தது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் பீதி அடைந்தனர். மேலும் தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட தொழிலாளர்களும் அச்சம் அடைந்தனர். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேவாலா வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT