தமிழக செய்திகள்

நீலகிரி: மசினகுடி வன பகுதியில் பயங்கர காட்டுத்தீ

மசினகுடியிலிருந்து சிங்காரா நீர் மின் நிலையம் செல்லும் வனப்பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப் பகுதிக்கு உட்பட்ட ஆச்சகரை பகுதி மற்றும் மசினகுடியிலிருந்து சிங்காரா நீர் மின் நிலையம் செல்லும் வனப்பகுதிகளில் எற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான பகுதி தீயில் எரிந்து சாம்பலாகின.

இந்நிலையில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக குழுக்களாகப் பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT